உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட்

உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.

கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் தயார்.