உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா?

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் எதிர்வரும் 30-ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் வெற்றி பெறபோகும் அணிகளுக்கான பரிசு விவரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய மதிப்பில் அதன் விபரங்கள்:

1. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி – 28 கோடி ரூபாய்.
2. இரண்டாவது இடம் பெறும் அணி – 14 கோடி ரூபாய்.
3. அரையிறுதி வரை வரும் இரண்டு அணிகள் – தலா 5.61 கோடி ரூபாய்.
4. லீக் பிரிவில் (45 ஆட்டங்களில்) வெல்லும் அணிகள் – தலா 28 லட்சம் ரூபாய்.
5. லீக் பிரிவை தாண்டிய அணிகள் – தலா 70லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தின் இறுதி போட்டி ஜூலை 14 ஆம் திகதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான அவுஸ்திரேலியாவுடன், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை உள்பட 10 நாட்டின் அணிகள் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.