உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது !

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

12 ஆவது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்14 ஆம் வரை இடம்பெறவுள்ளது.

இதில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதோஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியதீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இலங்கை குழாமை திமுத்து கருணாரத்ன வழிநடத்துகின்றார் அவருடன்

அஞ்சலோ மெத்தியூஸ்,
லசித் மாலிங்க,
குசல் ஜனித் பெரேரா,
லகிரு திரிமன்னே,
அவிஸ்க பெர்னாண்டோ,
குசல் மெண்டிஸ்,
தனஞ்சய டி சில்வா,
ஜெப்ரி வெண்டர்சா,
திசர பெரேரா,
இசுறு உதான,
சுரங்க லக்மால்,
நுவான் பிரதீப்,
ஜீவன் மெண்டிஸ்,
மிலிந்த சிறிவர்தன
ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய உள்ளிட்டவர்கள் அணியில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.