உலகத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் சிறுவன்: 7 கோடி பரிசு…. குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டு வெற்றி பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

குறித்த சிறுவன் போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன்.

ஏற்கனவே, 1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் வாய்பிளக்கச் செய்தார் லிடியன்.

அதைப்பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்ய அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவியது.

ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர்.

14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த லிடியன் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மினி மேஸ்ட்ரோ என்று செல்லமாக அழைக்கப்படும் லிடியனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.