உலக அலைச்சறுக்குப் போட்டி: வெற்றியை தனதாக்கினார் அவுஸ்திரேலிய வீராங்கனை!

உலக அலைச்சறுக்குப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை (TylerWright) டெய்லர் ரைட் இரண்டாவது முறையாக பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் உலக அலைச்சறுக்குப் போட்டி நடைபெறுகிறது.

இதில் பெண்களுக்கான காலிறுதி போட்டியில், அமெரிக்க வீராங்கனையை தோற்கடித்து டெய்லர் ரைட் வென்றுள்ளார்.

அரையிறுதியில் அவுஸ்திரேலிய வீராங்கனையுடன் போட்டியிட்ட டெய்லர் ரைட் கடந்த வருடம் வென்ற பட்டத்தை இந்த வருடமும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.