உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை!

உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகத் தளங்களை அணுகுவதிலும், செய்தி அனுப்புவதிலும் பயனீட்டாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இன்று மாலை முதல் உலக அளவில் Facebook தளத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக Down Detector இணையப்பக்கம் குறிப்பிட்டது.

Facebookகின் கிளை நிறுவனங்களான Instagram, WhatsApp ஆகியவற்றின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.