உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்! பிரபல வீரர் கணிப்பு

இம்முறை உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணியாக இங்கிலாந்து அல்லது இந்திய அணியே இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் நிச்சயமாக உலக கிண்ண போட்டியில் அரையிறுதிக்குள் செல்லும். இந்த அணிகள் இரண்டிலும் வீரர்கள் திறமைகளை காட்டி வருகின்றனர்.

அதேபோன்று மேற்கிந்திய அணியும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அணியாகவே இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.