உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பம்!-

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

48 வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்கே ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1¼ கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.1¼ கோடி கிடைக்கும்.

சாம்பியன் பட்டத்திற்குரிய பரிசுத்தொகை ரூ.11½ கோடி. ஆக தோல்வியே சந்திக்காமல் ஒரு வீரர் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் அவருக்கு மொத்தம் ரூ.16½ கோடி பரிசாக கிட்டும்.

அத்துடன் 1,500 வரை தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.