ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் நேற்றய தினம் நடைபெற்றது.

இதவேளை, படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி இந்த நிகழ்விற்கு இணையாக கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊடக செயற்பாட்டிற்கான சுதந்திர இயக்கம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.