எடையைக் குறைத்த பிரபல நடிகை! களத்தில் தயார் நிலையில்

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய நடிகை அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார்.

அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம்.

எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அந்த நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றனவாம்.

விரைவில் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.