எண்ணெய் வழிகிறதா.. கவலையை விடுங்க

தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும்.

வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.