எண் 13 பயப்படத்தக்க எண் கிடையாது! இதைப் படியுங்க

சிலருக்கு சில எண்களைக் கண்டாலே பயம் வரும். அப்படி சிலருக்கு பயம் தரும் எண் ‘13’ ஆகும். தாக்கத்திற்கும், தேக்கத்திற்கும் உரிய எண் என்று எண் 13 ஐ சொல்வார்கள்.

வெளிநாட்டில் உள்ள பெரிய ஹட்டல்களில் அறை எண் 12-க்கு அடுத்ததாக, 13 என்று எழுதாமல் ‘13A’ என்று எழுதி வைத்திருப்பார்கள்.

ஆனால் 13-ம் எண் அப்படி ஒன்றும் பயப்படத்தக்க எண் கிடையாது.

ஒருவர் தனுசு, மீன ராசியில் பிறந்து, அவரது சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் இணைந்திருந்தால், அவருக்கு 13 என்ற எண் யோக எண்ணாக அமையும்.

குரு வீட்டில் சூரியன் அமைந்த ஜாதகருக்கும் அந்த எண் யோகத்தை வழங்கும்.

அவர்களுக்கென்று வாழ்க்கை வளம்பெற சில பரிகார தலங்கள் இருக்கிறது.

இல்லத்தில் வழிபடுபவர்கள், ‘ஸ்ரீராம்.. ஜெயராம்.. ஜெய ஜெய ராம்’ என்ற 13 எழுத்து கொண்ட ராம நாமத்தை உச்சரித்தாலே நல்ல பலன் கிடைக்குமாம்.