எதிர்பாரா விதமாக தங்கக் கட்டி ஒன்றை கண்டுபிடித்த அவுஸ்திரேலியர்! அதிர வைக்கும் பெறுமதி

அவுஸ்திரேலியாவின் கல்கூர்லி (Kalgoorlie) பகுதியை சேர்ந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

தங்கச் சுரங்கத்திற்கு அருகே உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 100,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டி ஒன்றை குறித்த நபர் தோண்டியெடுத்துள்ளார்.

பொழுதுபோக்குக்காக எதையோ தேடிச் செல்லும் போது குறித்த எதிர்பாரா விதமாக அந்தப் பரிசு கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

அவுஸ்திரேலியாவில் தோண்டியெடுக்கப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது.

அதனால் அங்கு அவ்வப்போது சிறு சிறு தங்கக் கட்டிகள் மக்களுக்குக் கிடைப்பது வழக்கம் என்று வட்டாரவாசிகள் கூறினர்.