எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் கூகுள் தகவல் தொடர்பு செயலியான கூகுள் ஹேங் அவுட் மூடப்படும் என்று கூறப்படுகிறது.
கூகுளின் ‘ஆர்குட்’ உட்பட பல வசதிகள் நிறுத்தப்பட்ட நிலையில் விரைவில் கூகுள் யூஆர்.எல் ஷார்ட்னர் வசதியும் நிறுத்தப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஹேங் அவுட் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
இந்த அப்ளிகேசனில் ஆரம்பத்தில் மெசேஜ், வீடியோ சாட், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பல வசதிகள் இருந்தது.
ஆனால் அதில் பல்வேறு அம்சங்களை குறைக்க தொடங்கிய கூகுள் சமீபத்தில் எஸ்.எம்.எஸ். வசதியையும் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய சாட்டிங் செயலியாக இருக்கும் இந்த ஹேங் அவுட் வ்சதி 2020 இல் நிறுத்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எவ்வாறிருப்பினும் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.