என்னைப் பற்றி வெளியாகும் செய்தியில் உண்மையில்லை!

சிம்பு நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த நடிகை சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட உள்ளதாக தகவல் வெளியானது.

முதலில் இந்த தகவலை கண்டுகொள்ளாத குறித்த நடிகை அதிக சம்பளத்துக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்ததால் பதில் அளித்துள்ளார்.

‘ரசிகர்களே, என்னைப் பற்றி வரும் தகவலில் உண்மை இல்லை. நம்பாதீங்க.

இதுபோன்ற தவறான தகவல்களை நான் கண்டுகொள்வதில்லை. அது தன்னால் அடங்கிவிடும் என்று விட்டுவிடுவேன். ஆனால் அது முடிந்த பாடில்லை. தொடர்கிறது.

தற்போது எந்த ஒரு படத்திற்கும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவில்லை. அதிக சம்பளமும் பெறவில்லை என்று கூறினார்.