என்ன தான் இருந்தாலும் நடிகை ஓகே சொல்லியிருக்கலாம்!

முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை நடிகருடனான திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார்.

பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.

தற்போது நாயகியின் கைவசம் ஒருசில படங்கள் உள்ளதாம். நாயகியை அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்க கேட்டதாகவும், நடிகை மறுத்துவிட்டதாகவும் ஏற்கனவே படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் தான் நாயகி மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் நாயகியை அறிமுகம் செய்து புகழை தேடித் தந்த இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டாமா என்று பலர் பேசுகிறார்கள்.