என் மனைவியை அபகரித்து விட்டார்: வெளிநாட்டில் வசிக்கும் இந்திய இளைஞர் கண்ணீர்

கென்யாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியை அழைத்து கொண்டு உள்ளூர் நபர் ஓடிபோய்விட்டதாக பொலிசாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Makindu கவுண்டியை சேர்ந்த எல்விஸ் என்பவர் நாட்டின் தலைநகர் Nairobi-வில் வசித்து வரும் இந்தியரான யாசின் என்பவரிடம் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தனது மனைவியுடன் எல்விஸ் ஓடிபோய்விட்டதாக யாசின் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இது குறித்து யாசின் கூறுகையில்,

என் மனைவியை என்னிடமிருந்து எல்விஸ் அபகரித்துவிட்டார் என்றும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் ஆபத்தில் இருக்கலாம்.

அவர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் என்னிடமோ அல்லது பொலிஸ் அதிகாரிகளிடமோ தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.