எமலோகம் இப்படித்தான் இருக்குமா? வானவியலாளர் வெளியிட்ட புகைப்படம் என்ன?

எமலோகம் எப்படி இருக்குமென்று கேள்வி அனைவரிடம் உள்ளது.

ஏனெனில் இறப்புக்குப் பயப்படுதல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான பண்பாகும்.

அதிலும் இறந்த பின் நரகத்துக்குப் போவதை நினைப்பதே பெரிய கலக்கம் தான்.

எமலோகம் என்றால் நாம் எல்லாம் தனியாக ஒரு உலகத்தையே கொள்கிறோம்.

சிலரது கருத்துப்படி அது வானத்தில் இருப்பதாகவும் இன்னும் பலரது கருத்துப்படி அது பாதாளத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் விண்வெளியில் மிதந்த பல வீரர்களும் அந்த விண்வெளி அனுபவங்கள் குறித்து விபரிக்கும்போது எமலோகம் ஒன்றை நேரில் கண்டு மீண்டதாகவே கூறுகின்றனர்.

இந்த நிலையில் விண்ணில் மிதந்தவாறே பூமியைச் சுற்றி வந்த கனடாவை சேர்ந்த வானவியலார் கிரிஸ் ஹேன்ட்பீல்ட் என்பவர் அதன் அரிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

ஐஎஸ்எஸ் என அழைக்கப்படும் இன்டர்நஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வாயிலாக கடந்த 2012ல் உலகை சுற்றிவந்தபோதே இந்த புகைப்படங்களைப் பிடித்து வெளியிட்டார்.

இவர் தனது இந்தப் பயணத்தின்போது அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் இரவுக் காட்சிகளையே படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலர் நரகத்தின் புகைப்படம் என வர்ணனை செய்துள்ளதுடன் எமலோகத்தின் காட்சி இது தான் என கூறியுள்ளனர்.