ஏப்ரல் 01: முட்டாள்கள் தினம் எப்படி உருவானது..?

ஏப்ரல் முதலாம் திகதி என்றவுடன் முட்டாள்கள் தினம் என்று அனைவரையும் ஏமாற்றுகிறோம்.

ஆனால் 16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் திகதியை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்ததுள்ளது.

பின்னர் 1562 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது,

எனினும் இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது.

பிரான்ஸ் 1852ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ஆம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கினார்கள் மக்கள்.

இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் திகதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.

இதிலிருந்து ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன.