ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனால், மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படவேண்டிய மும்பை-மேவார்க் விமானம் அதிகாலை 4.08க்கு புறப்பட்டுச் சென்றது.

விமான பயணிகள் பரிசோதனை, சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமையை சரிசெய்ய ஏர் இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.