ஒரே புதைக்குழியில் 35 சடலங்கள்! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

ஒரே புதைகுழிக்குள் இருந்து குறைந்தது 35 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மெக்சிக்கோ மாநிலமான ஜாலிஸ்கோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகத் தடயவியல் புலனாய்வில் தெரிய வந்தது.

மாண்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன் தொடர்பில் இதுவரை 4 சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டில் போதைப்பொருளுக்கு எதிரான மெக்சிக்கோவின் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து இதுவரை 40,000 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.