ஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை

பாகுமதி நடிகை எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்களாம்.

இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார்.

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையைக் கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.

எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையைக் குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

எப்படியும் அம்மணி எடையைக் குறைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.