ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது.

இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) – அரை கப்
கேரட் – 1
பீன்ஸ் – 5
பச்சைப் பட்டாணி – 1 கைப்பிடி
வெங்காயம் – 1 சிறியது
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 2 1/2 கப்

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு வறுத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும். மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.