ஓரங்கட்டப்படும் சந்திரிக்கா! அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க புதிய வியூகம்!!

மகிந்தவுக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மறைமுகமாக முன்னெடுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி – ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பெரும்பங்குண்டு.

மேலும் சுதந்திரக்கட்சியில் அதிருப்தி நிலையில் இருந்த உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சு நடத்தி, சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டுக்கு உயிர்கொடுத்தார்.

இதேவேளை 2014 நவம்பர் 21ஆம் திகதி தான் சுதந்திர கட்சியின் முக்கிய 10 புள்ளிகளுடன் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மகிந்தவுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தினார் மைத்திரி.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக கடுமையாக பல விடயங்களை செய்த சந்திரிக்காவை ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்காமல் சந்திரிக்காவை அவமதிக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் என விசனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் அனைத்துமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

அத்துடன், தாய்க்கட்சியான சுதந்திரக்கட்சியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சங்கமிக்கவைக்க சிலர் எடுத்துவரும் முயற்சியும் சந்திரிக்காவுக்கு கடும் சினத்தையே ஏற்படுத்தியுள்ளது என வெளியான தகவல்கள் சுட்டுகின்றன.

எனவே, விரைவில் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் புதிய வியூகமொன்றை சந்திரிக்கா தனது கையில் எடுப்பார் என தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.