ஓரின சேர்க்கை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை மெகன் ஸ்கட் தோழியை மணக்கிறார்!!

அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட் தனது தோழியை விரைவில் மணக்க இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.