ஓவியாவின் துணிச்சல்!!

நடிகை ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தில் அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் பற்றி படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் கேட்டபோது,

‘இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பெண் அப்படி வளர்வதில்லை.

ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல வி‌ஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை.

அந்த மாதிரி வி‌ஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட நட்பு எப்படி இருக்கணும்?

காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’.

ஓவியா அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார் என்று கூறியுள்ளார்.