கஞ்சாவுடன் கைதான இருவர்!

கல்முனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு கல்முனை பிரதேசத்தில் குறித்த இருவரையும் பொலிசார் சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து தலா 1 கிராம் வீதம் 2 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்

இச் சம்பவத்தில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை 950 கிராம் மாவா போதைப் பொருளுடன் ஒருவரை நற்பட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழருவி நிருபர் கனகராசா சரவணன்