கடவுளுக்கு முன் ஆபாச புகைப்படம் எடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் பிக் பாஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சாமி சிலை முன்பு நின்று தொடையை காண்பித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். இளைஞர்களின் கனவு நாயகியாக தற்போது இருந்து வருகிறார்.

தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிள்ளையார் சாமி சிலை முன்பு தொடையைக் காட்டி நிற்கிறார். அது கவர்ச்சிப் புகைப்படமாக இருப்பதால், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் – 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த்இ ஐஸ்வர்யா தத்தா கலந்து கொண்டனர். இவர்களது நட்பு தொடங்கி, ஓராண்டு முடிவடைந்துள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அப்போதும் அந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.