கணுக்கால் பிரச்சனையால் இன்றைய போட்டியில் கலந்து கொள்ளாத வீரர்

பீஜிங் நகரில் விறுவிறுப்பாக நடைபெறும் சீன பகிரங்க டென்னிஸ் போட்டியில் கணுக்கால் பிரச்சனை காரணமாக இன்று (சனிக்கிழமை) அரையிறுதி போட்டியில் ஃபேபியோ பக்னினியால் பங்குபற்றமுடியாமல் போயுள்ளது.

இதன் காரணமாக அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலிய டென்னிஸ் வீரர் ஃபேபியோ பக்னினி மற்றும் ஹங்கேரிய டென்னிஸ் வீரர் Márton Fucsovics ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர்.

இதில் முதல் செட்டை 6- 4 என கைப்பற்றிய ஃபேபியோ பக்னினி 2 ஆவது செட்டையும் 6- 4 என கைப்பற்றி இலகுவாக வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு நுழைந்த ஃபேபியோ பக்னினியால் இன்று நடைபெற்ற போட்டியில் விளையாட முடியாமற்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.