கண்ணிலிருந்து வெளியேறும் புழு; வினோத நோயால் அவதிப்படும் பெண்

இளம் பெண் ஒருவருக்கு கண்களில் புழுக்கள் வெளிப்படும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒரேகன் (oregon) பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான அந்த பெண் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் கண் மருத்துவரிடம் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணிலிருந்து அரை அங்குல புழுவை வெளியே எடுத்தனர்.

கடந்த 20 நாட்களில் அவரது கண்களிலிருந்து 14 புழுக்கள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

கால்நடைகளில் மட்டுமே காணப்படும் இந்நோய் முதன் முறையாக மனிதர்களில் கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவர்கள் அதிர்சியினை வெளியிட்டுள்ளனர்.