கண் அசைவால் ரசிகர்களை கொள்ளை கொண்ட ப்ரியா வாரியர் (வீடியோ)

ப்ரேமம், ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு `மாணிக்ய மலராய பூவி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த பாடலில் வரும் ப்ரியா வாரியர் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி இருக்கிறார்.

மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்’, `சங்ஃஸ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பெப்ரவரி 9-ஆம் திகதி படக்குழு வெளியிட்டுள்ளது.

`மாணிக்ய மலராய பூவி’ என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்ற தருணத்தில் தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது.

3 நாட்களில் இந்த வீடியோவை யூடியூப்பில் சுமார் 48 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

ஒன்றரை லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். யூடியூப் டிரெண்டிங்கில் இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது.

அந்த காட்சியில் வரும் ப்ரியா வாரியரை 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பின்பற்ற ஆரம்பத்துள்ளனர்.