கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவன் (வீடியோ)

வீதியைக் கடக்க முயன்ற சிறுவன் ஒருநொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று நோர்வேயில் பதிவாகியுள்ளது.

கனரக பாரவூர்தியிலிருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் குறித்த சம்பவத்தின் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அதிகமான வேகத்துடன் பயணித்தாலும், எதிலும் நிதானம் தேவை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

குறித்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரை சமூகவலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.