கனடாவில் நடந்த சோகம்: 23 பேர் காயம்! மூவர் பலி

கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.

ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது..

பேருந்தின் மேல் தளம் சேதமடைந்தமையால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்துள்ளனர். இதனால் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்களே காயமடைந்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டாவா மேயரான Jim Watson, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.