கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது!

கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவரது ஆட்டத்தை வைத்து முன்னாள் வீரர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர்.

இதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.

கபில்தேவை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருதலைமுறை வீரர் இல்லை. ஒரு நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர். டான் பிராட்மேன், தெண்டுல்கரை போன்றவர் ஆவார். இதனால் நாம் கபில்தேவுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார்.