கருவளையத்திற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம்?

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்.

இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கரட், பீட்ரூட் ஜீஸ், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்து வந்தால் கண்ணின் கருவளையத்தை விரட்டி விடலாம்.