கர்ப்பிணியைக் கொன்றுவிட்டு வயிற்றுக்குள் இருந்த சிசுவை உயிருடன் எடுத்த கும்பல்!

குழந்தை ஆசையால் கர்ப்பிணியைக் கொலை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் எடுத்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 19 வயதான ஒசாவோ லோபஸ் என்ற 9மாத கர்ப்பிணி கடந்த மாதம் காணாமல் போனார்.

இந்நிலையில் பொலிஸார் அவரை தேடி வந்த நிலையில் ஒசாவோ லோபஸ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. இதனையடுத்து குழந்தையை லோபஸின் வயிற்றில் இருந்து எடுத்துவிட்டு யாரோ அவரை கொலை செய்துள்ளதாக போலிசார் சந்தேகத்தினர்.

இந்த விவகாரம் சிகாகோ முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொலிஸாரின் விசாரணையின் படி ‘குழந்தைகளுக்கு ஆடை கொடுக்கப்படும்’ என்ற பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து ஒசாவோ லோபஸ் சென்றதாகவும் அங்கே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இந்த கொலை தொடர்பாக 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளாரிசா (46), டிசைரி (24) மற்றும் கிளாரிசாவின் ஆண் நண்பர் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த பொலிஸார் குழந்தைக்காக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குழந்தையை உயிருடன் எடுத்த டிசைரி, அது தன் குழந்தை என்று உரிமை கொண்டாடியுள்ளார், ஆனால் டிஎன்ஏ சோதனையில் அது ஒசாவோ லோபஸின் குழந்தை என தெரிய வர தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒசாவோ லோபஸின் வயிற்றில் இருந்து குழந்தை எப்படி எடுக்கப்பட்டது என்ற விவரத்தை பொலிஸார் வெளியிடவில்லை.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது ஒசாவோ லோபஸின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தைக்கு யாடியல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தற்போது யாடியல் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.