கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு வீடியோ

கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.

சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினருக்கான தொழுகை கூடத்தில் சென்றதாக கூறியே குறித்த சிறுவன் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளான்.

ஷியா பிரிவை சேர்ந்த ஜகரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தமது தாயாருடன் மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் தொழுகை கூடத்தில் சென்றுள்ளார்.

இது சன்னி பிரிவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து மகனுடன் காரில் சென்ற தாயாரிடம் அந்த ஓட்டுனர் ஷியா பிரிவினரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் என பதிலளித்த அடுத்த நொடியில் காரை நிறுத்தி அந்த தாயாரிடம் இருந்து சிறுவன் ஜகரியாவை பறித்து குறித்த ஓட்டுனர் வெளியேற்றியுள்ளார்.

அப்பகுதியில் கிடந்த போத்தல் ஒன்றை உடைத்து, அதில் இருந்து கூரான கண்ணாடியால் அங்கேயே சிறுவனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

இச்சம்பவத்தை நேரிடையாக பார்க்க நேர்ந்த ஜாகரியாவின் தாயார் சுயநினைவை இழந்து சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு படுகொலை செய்யப்பட்ட ஜகரியாவின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சவுதி அரேபியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளத்தில் ஜகரியாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த சிறுவன் ஸகாரியாவின் இறுதிச் சடங்கு வீடியோ வெளியாகி சவுதி உட்படப் பல நாட்டு மக்களின் மனதை கண்கலங்கச் செய்துள்ளது.