காதலனின் காலில் விழுந்து கெஞ்சிய காதலி! திருமண வைபவத்தில் நடந்த குழப்பம்

தன்னுடைய முன்னாள் காதலனின் திருமணத்துக்கு சென்ற பெண் வந்திருந்தவர்களை அதிர்சசிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. திருமண உடையில் வந்த ஒரு பெண் மணமேடையில் தன முன்னாள் காதலனின் காலில் விழுந்து கெஞ்சுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த பெண் மிகவும் மனவேதனையோடு மணமேடையில் தன் முன்னாள் காதலனிடம் தன்னை திரும்ப ஏற்குமாறு சொல்லி கெஞ்சுகிறார். இது முழுவதும் தன் தவறு என்றும் கூறி அழுகிறார்.

மேலும், தனது முன்னாள் காதலரின் கோட்டை பிடித்து இழுக்க அவர் உதறிவிடுகிறார்.இதனை கண்ட மணப்பெண் கோபத்தில் வெளியேறுகிறார். அவரை பின் தொடர்ந்த மணமகனும் சொல்கிறார்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.