காதலியைக் கரம்பிடிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் (வயது 23) தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார்.

இவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வரும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன்,

எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தேன்.

தற்போது அதற்கான காலம் கனிந்து விட்டது என்றும் உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.