காதலியை கரம்பிடிக்க இருந்த நிலையில் காதலனின் விபரீத முடிவு: அதிர்ச்சியில் காதலி செய்த செயல்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பொலிஸ் காதலர்கள் விஷம் குடித்த நிலையில் காதலன் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ஜெயதேவன் (30). இவர் பொலிசாக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கும் பெண் காவலரான செண்பகம் (27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி பெப்ரவரி 17ம் திகதி திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக வயிற்று புண் மற்றும் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயதேவன், அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும், வயிற்று வலி தீராமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 28 ஆம் திகதி எலிமருந்தை குடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து இவரை மீட்ட குடும்பத்தார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காதலன் செயலால் மனமுடைந்த காதலி செண்பகமும், எலி மருந்தை சாப்பிட்டு கோயிலில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.