காதலில் விழுந்த கமலின் மகள்: உறுதிபடுத்தும் தகவல் இதோ!

கமல்ஹாசனின் மூத்த மகளும் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்கின்றனர்.

ஆதவ் கண்ணதாசன் – வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

இத்தாலியரான மைக்கேல் கார்சல் பட்டு வேட்டி, சட்டையுடனும், சுருதிஹாசன் பட்டுப் புடவையிலும் திருமணத்துக்கு வந்தனர்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டபோதும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். எனவே இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதி. கமலும் சம்மதித்துவிட்டார் என்ற செய்திகள் வந்தன.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கமலின் மூத்த மகள், என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.