காதலை மறைத்து வந்த நடிகை எடுத்த அதிரடி முடிவு!

காதல் கிசுகிசு அடிக்கடி வரும் நான்கெழுத்து நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்ததால், காதலை மறைத்து வந்துள்ளதாக தெரிகிறது.

நாயகி நடிப்பில் தற்போது சில படங்கள் தயாராகி இருக்கிறதாம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேய் படம் ஒன்றுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம்.

இதனால் வருத்தப்பட்ட நடிகை இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடாலடியாக தனது ரூட்டை மாற்றி, க காமெடி படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.