காமெடி நடிகரால் இயக்குனருக்கு ஏற்பட்ட தலைவலி!!

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பிறகு காசு, பணம் என ஆட்டம் போட்ட நகைச்சுவை நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது.

அண்மையில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம்.

அவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

படத்தின் புரமோஷனுக்கு கூப்பிட்டால் சார் வரமாட்டாரா என்று தெரியவில்லை. ட்விட்டரில் பேசுகிறார், நேரில் வரமாட்டாரா என்று இயக்குனர் மேடையிலேயே ஆதங்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.