காரை பரிசளித்த பிரபாஸ்; காதல் விவகாரம் உண்மையோ?

அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் கொடுத்த காஸ்ட்லி பரிசு பற்றிதான் தற்போது பலரது பேச்சும் அமைந்துள்ளது.

அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக பலர் பலவிதமான தகவல்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று கூறி வரும் நிலையில், அனுஷ்காவின் 36வது பிறந்தநாளில் அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரசிகர்கள் இது கன்ஃபர்மாக காதல் தான் என்று கூறி வருகின்றனர்.

இதேவேளை பிரபாஸ் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டிசைனர் கைக்கடிகாரத்தை, அனுஷ்கா கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் விவகாரம் முற்றினால் வெளியில் வராமலா போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.