கார்களை கழுவியமையினால் சிக்கலில் சிக்கிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் கார்கள் குடிநீரில் கழுவியதால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது குரூர்கிரம் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. அந்த கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்தியாவில் நீர் தட்டுப்பாடு இருப்பதால் அதை கண்ட அயல்வீட்டுக்காரர் மாநகரசபைக்கு புகாரளித்துள்ளனர்.

அங்கு வந்த மாநகர சபை அதிகாரிகள், விராட் கோலி வீட்டில் காருக்கு குடிநீரை பயன்படுத்தி கழுவி வந்த பணியாளரை கையும், களவுமாக பிடித்து 500 இந்திய ரூபாய்கள் அபராதம் விதித்துள்ளனர்.

அபராதத் தொகைக்கான பற்றுச் சீட்டு அந்த பணியாளர் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது

.விராட் கோலி வீட்டில் மட்டுமல்ல, பல வீடுகளுக்கும் இதே போல அபராதம் (500 ரூபா) விதித்ததாக அதிகாரிகள் விளக்கமும் கூறியுள்ளனர்.