காலி வன்முறை; 19 பேர் கைது; பொலிசார் கூறிய தகவல் (படங்கள்)

காலி ஜின்தோட்டையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து மற்றும் கால்பந்தாட்ட போட்டியை தொடர்ந்து காலி ஜின்தோட்டை பகுதியில் இரண்டு இனக் குழுக்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டு ஸ்தலமும் சேதமாக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 9 மணி வரை காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை மேற்கு மற்றும் கிழக்கு, பியதிகம ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை 100ற்கும் மேற்பட்ட பொலிசார் விசேட அதிரடிப் படையினரும் 200 பொலிசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.