கிண்ணத்தை வென்றது மும்பை அணி! அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா?

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை அணி 4வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

மலிங்கா கடைசி ஒரு பதில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, சாமர்த்தியமாக விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் மும்பை அணி வெற்றியடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 4 முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீரர்களா என்று சென்னை அணி தலைவர், டோனியிடம் வினவிய போது, “எந்த ஒரு தயக்கமும் இன்றி, நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது” என்று டோனி கூறியுள்ளார்.

டோனி உலகக்க்கோப்பை போட்டியோடு அனைத்து வித போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறி வந்தது. இந்த நிலையில், அவரின் இந்த பதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.