கிழக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! முடங்கிய மட்டக்களப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் தலைப்பில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் குறித்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘ஜனாதிபதியே பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு’ எனும் தொனிப்பொருளில் இந்த ஹர்த்தாலில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதுடன், அரச நிறுவனங்கள் மக்கள் வரவின்மையினால் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையிலும், மக்கள் வரவு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.