கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்!

எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இதற்கான பணிப்புரையை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்திற்குப் பதிலாக எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.