கிழிந்து தொங்கிய காதுடன் விடாமல் சண்டை போட்ட வீரர்!!

குத்துச் சண்டை போட்டியின் போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டியின் போதே இங்கிலாந்து வீரரின் காது கிழிந்துள்ளது.

இந்தப்போட்டியில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் – இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மோதினர்.

உலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரரின் தாக்குதலுக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார்.

9 ஆவது சுற்றின்போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த சுற்றிற்கு தயாரானார்.

இருப்பினும் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் போட்டியும் நிறுத்தப்பட்டது.

அதேவேளை மெக்சிகோ வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.